களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் : கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள்

x

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அம்பாள் நீல நிற பட்டு உடுத்தி, குங்குமப்பூ மாலை அணிந்து லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமேஸ்வரத்தில் உள்ளூர் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் ராஜகணபதி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலையில் இருந்தே சிறப்பு பூஜைகள் தொடங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்