"மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்" - முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

x

"மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்" - முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 98 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் இருப்பதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளதாக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவதாகவும், வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் வலுவான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்திய அவர், மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்