வண்ணமிகு அலங்காரம்... ஜொலித்த அயோத்தி... தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

x

வண்ணமிகு அலங்காரம்... ஜொலித்த அயோத்தி... தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுதோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2014 ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஆண்டுதோறும் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார். அந்த வரிசையில் இம்முறை உத்தரகாண்ட்டில் உள்ள மானாவில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடுகிறார்.

பிரதமர் மோடி தீபாவளி பண்டிகை கொண்டாட அயோத்தி சென்ற நிலையில், விழா கோலம் பூண்டு ஜொலித்தது, அயோத்தி நகரம்.அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு, ராமர் கோயிலின் கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அயோத்தியில் தீப உற்சவ விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதோடு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தம் அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்த அவர், அங்கு ராஜ அபிஷேகம் பூஜையில் பங்கேற்பார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் வருகையையொட்டி , சரயு நதிக்கரையில் அமைந்துள்ள கோயிலில் கண்கவர் லேசர் அலங்கார ஒளி அமைப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அயோத்தியில் வானத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையை பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்