போதைப்பொருள் உபயோகிப்பதற்காக சிறுவர்கள் செய்த அதிர்ச்சி காரியம் - சிசிடிவியில் சிக்கிய சிறார்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்ட நபர்கள், இன்னொரு டூவீலரை திருட முயற்சித்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

போலீசார் விசாரணையில் பிடிபட்ட 5 பேரும் 17 வயது கூட நிரம்பாத சிறார்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள டூவீலரை சிறு சிறு பகுதிகளாக பிரித்ததுடன், பழைய இரும்பு கடையில் வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்று போதைப்பொருள் உபயோகித்ததும் தெரியவந்தது.

இதுவரை 3 டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார், சிறார்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்