🔴LIVE : சென்னை வேளச்சேரி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு | CM Stalin

x

தமிழகம் முழுவதும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. இதனால் வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் தேங்காமல் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்று மதுரையில் இருந்து விமானம் முலம் சென்னை திரும்பினார். விமானத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஒட்டலில் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திடீரென வேளச்சேரிக்கு சென்றார். அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடியிடம் கேட்டு அறிந்தார். வேளச்சேரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் வீராங்கல் ஒடை வழியாக கைவேலிக்கு சென்று சதுப்பு நிலத்திற்கு செல்லும் வகையில் செய்யப்பட்டு பணிகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்