சாம்பியன் லீக் கால்பந்து தொடர்..மகுடம் சூடிய மான்செஸ்டர்

x

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இன்டர் மிலன் அணியும் மான்செஸ்டர் சிட்டி அணியும் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி கோல் அடித்தார். இதன்மூலம் முன்னிலைப் பெற்ற மான்செஸ்டர் அணி, ஆட்ட நேர முடிவில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது.


Next Story

மேலும் செய்திகள்