ஆப்கானை பதம் பார்த்த வங்கதேசம்..தொடரை கைப்பற்றி அசத்தல் | Bangladesh | T20 Cricket

x

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்கதேசம் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்றது. சில்ஹெட் நகரில் நடைபெற்ற 2வது டி20 போட்டி மழை காரணமாக 17 ஓவர்களாக நடத்தப்பட்டது. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான், 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 16 புள்ளி 1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம், டி20 தொடரை முழுமையாக வென்றது.


Next Story

மேலும் செய்திகள்