இங்கிலாந்தை துவம்சம் செய்த பாகிஸ்தான் - பாபர் அசாம் மிரட்டல் சதம்

x

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. கராச்சியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய பாபர் அசாம் 110 ரன்களும், ரிஸ்வான் 88 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் 3 ஆவது டி20 போட்டி, இன்று கராச்சியில் நடைபெறுகிறது


Next Story

மேலும் செய்திகள்