தொழிலதிபர் வீட்டில் சிறுக சிறுக எடுத்து வைத்து விற்பனை - உரிமையாளருக்கு துரோகம் செய்த காவலாளி

x

காரைக்குடி அருகே பிரபல தொழிலதிபர்கள் வீட்டில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோன வழக்கில் காவலாளி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள முருகப்பா குரூப் நிறுவனத்தின் பூர்வீக வீடு, பள்ளத்தூரில் உள்ளது. அந்த வீட்டிற்கு முருகப்பா குரூப் மேலாளர் மாணிக்கம் சென்றிருந்த போது, வீட்டில் இருந்த பொருட்கள் காணாமல் போனதால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் வேலை பார்த்த சோலை என்பவர், பல ஆண்டுகளாக சிறுக சிறுக பொருட்களை திருடி கடைகளில் விற்பனை செய்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து பொருட்களை மீட்ட போலீசார், சோலை மற்றும் உடந்தையாக இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்