அரசு ஊழியரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, அரசு ஊழியரை தாக்கிய சம்பவத்தில், அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது, போலீசார் 9 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றும் கருப்பையா என்பவரை, அதிமுகவை சேர்ந்த கே.போத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உக்கிரபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள உக்கிரபாண்டியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்