பாகிஸ்தானை கொதிக்க வைத்த ஒரு வீடியோ... உடனடியாக ஹோலிக்கு தடை போட்ட அரசு - புண்பட்ட இந்துக்கள்.. பறந்த எச்சரிக்கை

x

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட, அந்த நாட்டின் உயர்கல்வித்துறை தடைவிதித்திருக்கிறது... திடீர் தடைவிதிப்புக்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.....

பாகிஸ்தான் பல்கலைக் கழகங்களில் ஹோலி விழா கொண்டாடுவதை தடை செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பாகிஸ்தான் உயர்கல்வித்துறை. இந்த செய்தி அங்கு வாழும் இந்தியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தற்சமயம் 1.6 சதவீத இந்துக்கள் வசித்து வருகின்றனர், தாக்குதல், பிரச்னைகள் என்று இருந்தாலும், அவர்கள் தங்கள் மதச டங்குகளை கொண்டாடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சமீபத்தில்தான் அங்கு வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்கள். வண்ணப் பொடிகளை தூவி வரவேற்று கொண்டாடிய வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இருக்கும், Quaid-i-Azam பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் ஹோலி கொண்டிடாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் பெருங்கூட்டமாக சேர்ந்து, வண்ணங்களை பூசி, மகிழ்ச்சி களிப்பில் வீடியோ ஒன்றையும் சமூகவலைதளத்தில் பதிவு செய்துவிட்டனர்.

அந்த வீடியோதான் பிரச்னைக்கான தொடக்கப்புள்ளியாக மாறியது....

பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையத்தின் கண்களில் அது பட்டுவிட, "எப்படி மாற்று மதத்தை சேர்ந்த ஒரு விழாவை, இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் விமரிசையாக கொண்டாடலாம்" என கொந்தளித்தது.

உடனே Quaid-i-Azam க்கு நோட்டிசையும், கூடவே ஒரு அறிவிப்பையும் வெளியிட்டது. அதில் "நீங்கள் செய்யும் இந்த வேலை நாட்டின் நற்பெயரை கெடுக்கிறது. இஸ்லாமிய மதத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கிறது".

இஸ்லாமியர்கள் நம் சமூக கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும், அதற்கு பங்கம் விளைவிக்காதீர்ர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இனி இது போன்ற விழாக்களை கொண்டாடதீர்கள் என்று எச்சரிக்கையும் செய்துள்ளனர். கூடவே பல்கலைக் கழகங்களில் ஹோலி பண்டிகைகளை கொண்டாட தடையும் விதித்துள்ளனர். இந்த அறிவிப்பு பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தன்னை மதம் சார்ந்த ஒரு நாடாக அடையாளப் படுத்தி, அணிவகுத்ததின் விளைவாகவே தற்போதைய அதன் மோசமான நிலைக்கு காரணம் என்பதை மறந்து விடக்கூடாது என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்