டென்னிஸ் மைதானத்துக்குள் நுழைந்து.. திடீரென தீ வைத்துக்கொண்ட நபர்! அதிர்ந்துபோன அதிகாரிகள்

x

லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் மைதானத்திற்குள் சுற்றுச்சூழல் ஆர்வலர், தனது கையில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்ஸிபாஸ், ஸ்வார்ட்ஸ்மேன் இடையிலான போட்டியின்போது, மைதானத்துக்குள் ஒருவர் நுழைந்தார். அவரது டி-சர்ட்டில் தனியார் ஜெட் நிறுவனங்களை மூட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்த நிலையில், அவர் திடீரென தனது கைகளுக்கு தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்