ஒரு மெயில்.. ரூ.5.33 லட்சம்.. லண்டன் மாநாடு.. நண்பருடன் ஆசையாய் கிளம்பிய பேராசிரியர்.. சென்னை ஏர்போர்ட்டில் காத்திருந்த ஷாக்

x

லண்டனில் நடைபெறும் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி பேராசிரியர் ஒருவரிடம் பண மோசடி செய்த குஜராத் இளைஞரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

காரைக்கால் அருகே திருவட்டங்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் செந்தில் குமாரை கடந்த 2021 ஆம் ஆண்டு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், லண்டனில் நடைபெற போகும் மாநாடு ஒன்றிற்கு தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்றும், இதற்கான பயண செலவு 5 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் எனவும் கூறி பணம் பெற்றுள்ளார். மேலும், பயணத்திற்கான போலி விசா மற்றும் விமான டிக்கெட்டையும் மின்னஞ்சலில் அனுப்பி, பயணத்தில் ஒருவரை உடன் அழைத்து வரலாம் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி தன் நண்பருடன் சென்னை விமான நிலையம் சென்ற செந்தில் குமார், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், குஜாரத்தை சேர்ந்த யுவராஜ் சிங் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், சிம்கார்டு மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்