தீவிரவாதியுடன் சிறைக்குள் ஏற்பட்ட நட்பு.. INDIA கூட்டத்திற்கு அடுத்த நாளே பயங்கரம்.. BANGLORE |

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு ஹப்பாள் பகுதியில் பதுங்கியிருந்த 5 தீவிரவாதிகள் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களிடம் இருந்து ஏழு நாட்டுத் துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், வாக்கி டாக்கிகள், கத்தி மற்றும் 19 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனர். கடந்த 2017ம் ஆண்டு ஆர்.டி.நகர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சுனைத் உட்பட 6 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு, 2008ம் ஆண்டு பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் இருந்த தீவிரவாதி நசீருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார். 6 பேரும் பிணையில் வெளியே வந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் நடத்த நசீர் மூளைச்சலவை செய்ததாக குறிப்பிட்டார். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள சுனைத்தை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்