நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டி திறந்து வைத்த ரசிகர் - கேக் வெட்டி கொண்டாட்டம்

x

ஆந்திராவில் நடிகை சமந்தாவிற்கு கட்டிய கோயிலை ரசிகர் ஒருவர் கேக் வெட்டி திறந்துள்ளார்.

குண்டூர் மாவட்டம் ஆலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப், தனது வீட்டிலேயே இந்த கோயிலை கட்டியுள்ளார். சமந்தாவின் பிறந்தநாளையொட்டி கோயிலை திறந்துவைத்து, கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். சமந்தாவின் நடிப்பை மட்டும் பார்க்கவில்லை, பிரத்யுஷா அறக்கட்டளையின் மூலம் அவர் செய்த உதவிகளையும் பார்த்தே ரசிகன் ஆனதாக சந்தீப் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்