ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் செய்த தம்பதி... "கடனை திருப்பி கேட்டால் அடிக்குறாங்க.."

x

திருப்பூர் அருகே வெள்ளகோவிலை சேர்ந்தவர் நம்புவனேஸ்வரி. இவர் தன் கணவருடன் சேர்ந்து ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்களிடமிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆத்துக்குளத்தை சேர்ந்த பாரதி சரவணன் என்பவர் வியாபாரத்திற்காக ஜவுளிகள் வாங்கி, 57 லட்சம் ரூபாய் வரை கடன் வைத்ததாக கூறப்படுகிறது. தொகையை திருப்பி செலுத்த வலியுறுத்தியும் கொடுக்காத நிலையில், கடன் தொல்லை ஏற்பட்டு நம்புவனேஷ்வரின் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, கடனை திருப்பி கேட்டு பாரதி சரவணின் வீட்டிற்கு, தந்தையுடன் மதுரைக்கு சென்றிருக்கிறார் நம்புனேஷ்வரி. அங்கு பணம் தர மறுத்த பாரதி சரவணின் குடும்பத்தினர், நம்புனேஷ்வரியையும், அவரது தந்தையையும் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, புகாரின் அடிப்படையில் பாரதி சரவணன், அவரின் மனைவி உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்