பனிக்குடத்துடன் சாலையில் வீசிச் செல்லப்பட்ட 6 மாத ஆண் கரு..! - ராசிபுரம் அருகே அதிர்ச்சி

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பனிக்குடத்துடன் 6 மாத கருவை மர்ம நபர் ஒருவர் சாலையில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... முனியப்பன் கோயில் சாலையில் பனிக்குடம் கூட உடையாமல் 6 மாத ஆண் கரு சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பனிக்குடத்துடன் கருவை எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அருகிலேயே தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், அங்கு பரிசோதனைக்கு வந்தவர்கள் யாரும் வீசிச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்