தங்கள் நாட்டு அதிபரை கைது செய்த US - ஆட்டம் பாட்டம்.. கொண்டாடும் வெனிசுலா மக்கள்
வெனிசுலா அதிபர் கைது- ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவில் சிறைபிடிக்கப்பட்டதை அந்நாட்டு மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். ஸ்பெயினில் வாழும் வெனிசுலா மக்கள், பார்சிலோனாவில் தங்கள் தாய்நாட்டு கொடியை ஏந்தி, செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டபடி பாடல் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள் விநியோக குற்றச்சாட்டின் கீழ், நிக்கோலஸ் மதுரோவை இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.