நாளை அதிபராகும் ட்ரம்ப்..பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் இந்திய பிரபலங்கள்..யார் யார் தெரியுமா..?
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பதவியேற்பு விழாவில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து துணை அதிபர் ஜேடி வேன்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வேன்ஸ் ஆகியோரையும் சந்திக்கின்றனர்... டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.