பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கிரேவ்லைன்ஸ் அணு மின் நிலையம், ஜெல்லி மீன்களின் படையெடுப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கிரேவ்லைன்ஸ் அணுமின் நிலையம், 900 மெகாவாட் மின்திறனை கொண்டது. இதன் மூலமாக அந்த நாட்டின் கனிசமான மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிரேவ்லைன்ஸ் அணுமின்நிலைய குளிர்விப்பான்களில் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் நுழைந்துள்ளன. இதன் காரணமாக, அணுமின்நிலையம் நிறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கோடைக்காலத்தில் ஜெல்லி மீன்கள் வருகை அதிகரிக்கும் என்பது குறிப்பிட தக்கது.