Pregnant Lady | நடுத்தெருவில் கர்ப்பிணி பெண்ணுக்கு கை விலங்கு போட்டு இழுத்து சென்ற அதிகாரி
கர்ப்பிணி பெண்ணை கைவிலங்கிட்டு இழுத்துச் சென்ற அதிகாரி
அமெரிக்காவின் மினசோட்டா Minnesota மாகாணத்தில், கர்ப்பிணிப் பெண்ணை, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் பனிசூழ்ந்த சாலையில், தரதரவென இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
குடியேற்றம் தொடர்பாக, ஈக்வடாரைச் சேர்ந்த தம்பதியினரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படும் நிலையில், கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், அவரது கைகளை விலங்கிட்டு இழுத்துச் சென்றது அங்கிருந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.