Donald Trump Order | "வேலைக்கு திரும்ப போங்க.." - டிரம்ப் அதிரடி உத்தரவு

Update: 2025-11-11 08:42 GMT

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியதால், விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், அதன் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக செலவின மசோதா நிறைவேறாததால், அரசு நிர்வாகம் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக முடங்கியது. இதனால், 13 ஆயிரத்துக்கும் அதிகமான விமான நிலைய பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில், அவர்களை பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட்ட டிரம்ப், இடைப்பட்ட காலத்தில் ஊதியமின்றி பணியாற்றியவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்