Melissa Cyclone Update | மிகவும் ஆபத்தான கொடூர புயல்.. நாடுகளையே புரட்டிய ராட்சத அலை

Update: 2025-10-29 11:07 GMT

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை, மெலிசா புயல் கரையை கடந்தபோது பதிவான காட்சிகள் தான் இவை...

மெலிசா புயல், ஜமைக்காவின் தென்மேற்கு நகரமான நியூ ஹோப் அருகே சக்திவாய்ந்த, வகை-5 புயலாக கரையைக் கடந்தபோது, மணிக்கு 295 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்றடித்தது. பலத்த மழை பெய்ததுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், மருத்துவமனை மற்றும் பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், மின்சாரம் இன்றி தவித்து வருவதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் கிங்ஸ்டனில் அதிக பாதிப்பு இல்லாத நிலையில், மான்டெகோ விரிகுடா பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மெலிசா புயல் தாக்குதல் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

தென்மேற்கு ஜமைக்காவின் செயிண்ட் எலிசபெத் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து மீட்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

ஜமைக்காவின் மாண்டேவில் Mandeville என்ற பகுதியில் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்