ஏமனின் தலைநகரில் இடியை இறக்கிய இஸ்ரேல் - எரிபொருள் கிடங்கில் குண்டு மழை..
காசாவுக்கு ஆதரவாக ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமனின் தலைநகர் மற்றும் ஹவுதி பயங்கரவாத அமைவிடங்களை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இஸ்ரேல் நடந்திய இந்த வான்வழி தாக்குதலில், ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கு முற்றிலுமாக சிதைந்தது. பல எரிபொருள் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 86 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.