Hong Kong Fire | குபுகுபுவென பற்றி எரிந்த அபார்ட்மெண்ட் - 94 பேர் பலி..300 பேர் மாயம் - கோர காட்சி

Update: 2025-11-28 03:38 GMT

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து - பலி 94 ஆக உயர்வு

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாயிரம் வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடந்த இரு நாட்களாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்ற நிலையில், இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவன இயக்குனர்கள் மற்றும் பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்