``இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை’’ - துருக்கி எடுத்த முடிவால் ஷாக்கிங் ட்விஸ்ட்

Update: 2025-08-30 02:55 GMT

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி

காசா உடனான போரை நிறுத்த வலியுறுத்தி, இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை துருக்கி அரசு துண்டித்துள்ளது. இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு துருக்கி கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேலிய விமானங்கள் துருக்கி வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியுள்ள துருக்கி, இஸ்ரேலை ஆதரிப்பதை உலக சக்திகள் நிறுத்த வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்