பூமியின் புதைகுழி.. நரகத்தின் உச்சம் - 24 மணி நேரத்தில் 322 உயிர்கள் போச்சு

Update: 2025-08-30 09:34 GMT

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர், இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் சூழலில், காசாவில் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, காசாவை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆகஸ்ட் 29ம் தேதி மட்டும் 59 பேர் கொல்லப்பட்டதாகவும், 244 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே, காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாகவும், உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322-ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்