மியான்மர் முழுக்க கவ்விய இருள்.. அப்பளம் போல் நொறுங்கி குவிந்த கட்டிடங்கள்
மியான்மரில் பயங்கர நில நடுக்கத்தை தொடர்ந்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. தலைநகர் நைபிடாவ் Nay Pyi Taw உள்ளிட்ட பகுதிகளில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.