Eiffel Tower | கொடூர புயல்.. உலக அதிசயமான ஈபிள் டவர் திடீரென மறைந்ததால் ஷாக்.. வைரலாகும் வீடியோ
பிரான்சில் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக, தலைநகர் பாரீசில் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்னல் மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், மழை மற்றும் மேகங்களுக்கு மத்தியில், திரைக்குப் பின்னால் மறைந்துபோவது போல் தெரிந்தது.