ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் மீது கத்தியால் தாக்குதல் அலறி துடித்த 18 பேர்

Update: 2025-05-24 15:16 GMT

ஜெர்மனியின் ஹம்பர்க் Hamburg ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்காக காத்திருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 18 பேர் காயமடைந்த நிலையில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக 39 வயது பெண்ணை போலீசார் கைது செய்து, தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்