Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.12.2025)| 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-12-25 00:59 GMT
  • இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது...இயேசு பிறந்ததை வரவேற்கும் வகையில் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவ மக்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்...
  • மத்திய கிழக்கின் மிகவும் பழமையான ஈராக் சையதத் அல்-நஜாத்தே பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது...தீ விபத்து நடந்து 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட பாரிஸின் புகழ்பெற்ற நோட்ரே-டேம் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பாக நடந்தது...
  • கிறிஸ்துமஸை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேவாலய பகுதிகள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. குறிப்பாக, நாகர்கோவிலில் வெட்டுர்ணிமடம், கற்கோவில் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகங்கள் விதவிதமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
  • தவெகவிற்கு அடுத்து வரும் 100 நாட்கள் மிகவும் முக்கியமான காலமாக இருப்பதால், ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த அறிவுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அப்போது, விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
  • டோக்கியோவில் உள்ள சன்ஷைன் அக்வேரியத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. சாண்டா கிளாஸ் வேடத்தில் அக்வேரியம் பணியாளர் ஒருவர் நீர்தொட்டியில் இறங்கி பென்குயின்களுக்கு உணவளித்தார்.மேலும், கடல்சிங்கங்களுக்கு கிறிஸ்துமஸ் அலங்கார பொம்மைகள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்