TN Dog Bite | தமிழ்நாட்டில் இத்தனை லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு? - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Update: 2025-12-25 03:38 GMT

தமிழ்நாட்டில் 5.5 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும், திருச்சி மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் பேரும் தஞ்சவூரில் சுமார் 22 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 22ஆயிரம் பேரும் சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 21 ஆயிரம் பேரும், புதுக்கோட்டையில் சுமார் 20ஆயிரம் பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையை பொறுத்தவரை சுமார் 15 ஆயிரம் பேர், நாய்க்கடியால் இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்