Dindigul | Theft | யாரையும் நம்பாதீங்க உஷார் மக்களே.. குறி வைத்து 15 பவுன் அபேஸ்
தோழியாக பழகி 15 பவுன் நகை திருட்டு - பெண் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் தோழி போல் பழகி 15 பவுன் நகையை நூதன முறையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். பழனி அருகே உள்ள கோயில் ஒன்றில், செல்வி என்பவர் வேண்டுதலுக்காக தங்கியிருந்த போது, அவரிடம் நட்பாக பேசி பழகிய மதுரை திருநகரை சேர்ந்த ஆரோக்கியமேரி, இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார். செல்வி மற்றும் அவரது கணவரை கேரளாவில் உள்ள கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்று, ஆரோக்கியமேரி தனது திட்டத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.