அதிமுக எங்களின் கூட்டணிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் அமமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக எங்களது கூட்டணியில் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். ஒருமித்த கருத்துடன் அனைவரும் செயல்பட்டால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்றும் தினகரன் பதிலளித்தார்.