தேர்தல் சுற்றுப்பயணத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வெற்றியை, மக்கள் தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.