TVK Arrest | ``என்னது அவர் கைதா?’’ - திடுக்கிடும் செய்தி கேட்டவுடன் ஓடோடிச் சென்ற அருண்ராஜ்
திருப்பூர் தவெக நிர்வாகி கைது - அருண்ராஜ் நேரில் ஆறுதல்
திருப்பூரில் பாறைக்குழியில் குப்பை கொட்டும் மாநகராட்சியை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லடத்தை சேர்ந்த தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரின் குடும்பத்தினரை, அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி தரப்பில் ராம் குமாரை வெளியே எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்கள் பிரச்னைகளுக்கு தவெக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார்.