Nellai | Water Issue | "என்னைக்கு தான் நல்ல காலம் பிறக்குமோ"-குடிக்க தண்ணீர் இல்லாமல் கதறும் மக்கள்
15 நாட்களாக குடிநீர் வரவில்லை என திசையன்விளை மக்கள் புகார்
நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தாமிரபரணி தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 15 நாட்களாக எந்த வீட்டிற்கும் குடிநீர் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. மாதம் 100 ரூபாய் கட்டணம் செலுத்தியும், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், கேன் குடிநீர் வாங்கி சமாளித்து வரும் பொதுமக்கள், குடிநீர் பஞ்சத்தைப் போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.