பிரியாணி சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை
தேனி மாவட்டம் கம்பத்தில், பிரியாணி கடையில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். உத்தம்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவர் கம்பத்தில் உள்ள பிரியாணி கடையில் உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுடன் கடைக்கு வந்த சிபி சூர்யா என்பவரின் கால், முருகன் என்பவர் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, பார்த்து செல்லுங்கள் என்று முருகன் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிபி சூர்யாவும் அவரது நணபர்களும் கத்தியால் தாக்கியதில் முருகன் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிபிசூர்யாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து முருகனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.