Chennai | திடீரென மயங்கிய டிரைவரால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் - சென்டர் மீடியன் மேலேறியதால் பகீர்
ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்- தடுப்பு சுவரில் மோதிய பேருந்து
சென்னையில் ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், மாநகர பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி - திருவள்ளூர் வழித்தடத்தில் கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பில் இரவு 10 மணியளவில் பேருந்து சென்றபோது, ஓட்டுநர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டு பேருந்து சாலை தடுப்பில் மோதியது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓட்டுநர் பழனி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.