பொத்துகிட்டு ஊத்திய வானம்.. போதும் போதும் என சொல்ல வைத்து காட்டடி அடித்த மழை

Update: 2024-05-24 02:20 GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனமழை பெய்தது. வாசுதேவநல்லூர், ராயகிரி, புளியங்குடி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. கனகம்மாசத்திரம், ஆர்.கே. பேட்டை, கே.ஜி கண்டிகை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை வெளுத்து வாங்கியது. இதனால், குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது.

இதேபோல், ஆலங்குளம், பாவூர்சத்

திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்