சித்ரா பௌர்ணமியையொட்டி கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கனரக வாகனங்கள் திருவண்ணாமலை நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கார், சிறிய ரக வாகனங்கள்,அரசு பேருந்துகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் நிலையில் கனரக வாகனங்கள், கண்டெய்னர் லாரி உள்ளிட்ட அனைத்து வகை லாரிகளுக்கும் திருவண்ணாமலையை நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டு போளூர் புறவழிச் சாலையில், செங்கம், கலசப்பாக்கம் உள்ளிட்ட மாற்றுச் சாலைகளின் வழியே செல்ல அறிவுறுத்தப்பட்டது.