Tirupur Dowry Issue | ரிதன்யா புதைந்த மண்ணில் அடுத்த பகீர்.. அணுஅணுவாக உயிர் குடித்த புகுந்த வீடு

Update: 2025-08-07 04:23 GMT

Tirupur Dowry Issue | ரிதன்யா புதைந்த மண்ணில் அடுத்த பகீர்.. அணுஅணுவாக உயிர் குடித்த புகுந்த வீடு

திருப்பூர் அருகே வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தூக்கிட்டு உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவரது மகள் பிரீத்திக்கு, ஈரோட்டை சேர்ந்த சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், பிரீத்தியிடம் மேற்கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தன் தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனை தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், சதீஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உரியநடவடிக்கை எடுத்த பின்னர்தான் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்ததால் பரபரப்பு எற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்