Tirunelveli | தந்தி டிவி செய்தி எதிரொலி - பழங்குடி மக்களின் நீண்ட கால கனவு நனவானது

Update: 2025-12-28 03:01 GMT

தந்தி டிவி செய்தி எதிரொலி - நிறைவேறிய பழங்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கை

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, நெல்லை, பாபநாசம், சின்ன மயிலாறு பழங்குடி மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் காரையார் அணையின் அடிவாரத்திலுள்ள சின்ன மயிலாறு பகுதியில் காணி பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த சுமார் 90 குடும்பந்க்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் காலங்களில் மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்படும் காட்சி சிறப்பு பேட்டியுடன் தந்தி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு ஆற்றை கடக்க இரும்பு பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்