Pudukottai | Pocso | கடற்கரையில் விளையாடிய சிறுமிகளிடம் அத்துமீறல் - மீனவர் போக்சோவில் அதிரடி கைது
புதுக்கோட்டை, மணல்மேல்குடியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்துல்லா என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீன்பிடி தொழில் செய்து வரும், அப்துல்லா அதே பகுதியை சேர்ந்த 3 சிறுமிகள் கடற்கரை பகுதிகளில் விளையாடிய போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.