Husband wife fight || கணவனை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி... ஜாமினில் வெளிவந்து வெறிதீர்த்த கணவன்

Update: 2025-06-13 09:45 GMT

கணவனை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி...

ஜாமினில் வெளிவந்து வெறிதீர்த்த கணவன்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (35). இவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. குமார் தனது மனைவி (மகேஸ்வரி)மற்றும் 2 மகன் ,2 மகள்கள் உடன் திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமார் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக குமாரின் மனைவி நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த குமார், தனது மனைவியை சந்தித்து, தான் மனம் திருந்தி விட்டதாகவும், ஒன்றாக சேர்ந்து குழந்தைகளுடன் வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி உள்ளார். ஆனாலும் மகேஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையானது வாக்குவாதமாக முற்றியது. இதையடுத்து ஆத்திரத்தில் இருந்த குமார் வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து மனைவியின் கழுத்தில் வெட்டியுள்ளார்.

இதில் வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே குமார் திருப்பூர் வடக்கு போலீசில் சரணடைந்துள்ளார். அவரை நல்லூர் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்