பள்ளியில் திருமண நாள் கொண்டாடிய ஆசிரியர் தம்பதி...வைரலாகும் வீடியோ

Update: 2025-04-24 03:22 GMT

ஆம்பூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் திருமண நாளை கொண்டாடிய ஆசிரியர் தம்பதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த சுதாகர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.அவரது

மனைவியும் அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் இருவரும் பள்ளி வேலை நேரத்தில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.அது தற்போது வைரலாகி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்