திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகர் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட போது கீழே விழுந்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களான, அபுர் மற்றும் ரஷிபர் ஆகிய இருவர், தங்களை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு, இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மேற்கு வங்க தொழிலாளர்கள், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.