"பிரமாண்ட சாதனை படைத்த தமிழ்நாடு" அமைச்சர் சொன்ன தகவல்

Update: 2025-05-01 05:48 GMT

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியில் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி தமிழ்நாடு பயணித்து வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,14.6 பில்லியன் அமெரிக்கா டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்றே கால் லட்சம் கோடி அளவிற்கு, தமிழ்நாட்டில் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு நடைபெற்றுள்ளதாகவும், இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 41.23 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், Ford நிறுவனம் மீண்டும் திறக்கப்படுவதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெறுவதாக கூறிய அமைச்சார் டி.ஆர்.பி ராஜா, மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்