ஆசிட் வீச்சால் பறிபோன பார்வை - மனம் தளராமல் தேர்வு எழுதி +2ல் 96% மார்க் எடுத்த மாணவி

Update: 2025-05-15 06:45 GMT

ஆசிட் வீச்சால் கண்பார்வையை இழந்த போதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார் சண்டிகரைச் சேர்ந்த மாணவி... கஃபி என்ற மாணவிக்கு 3 வயதாக இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர் குடும்ப பிரச்சினையால் கஃபி மீது ஆசிட் வீசியதில் படுகாயமடைந்து கண் பார்வையை இழந்தார். இருந்தபோது விடாமுயற்சியுடன் படித்த கஃபி CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவில் 96 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்... 10ம் வகுப்பிலும் 95 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே தன் கனவு என கூறியுள்ள கஃபிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்