Srivilliputtur | கோலாகலமாக திறக்கப்பட்ட சொர்க்கவாசல்.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் கொண்டாட்டம்..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில் பரமபதவாசல் வழியாக பெரியபெருமாளும், தொடர்ந்து ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாரும் எழுந்தருளினர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊர் எனும் சிறப்பு பெற்றதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.